[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் - ராகுல்காந்தி 

rahulgandhi-support-to-p-chithambaram

ப.சிதம்பரத்தின் மீதான மத்திய அரசின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ப.சிதம்பரத்தின் மீதான மத்திய அரசின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி செய்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக பிரியங்கா காந்தி ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் சிபிஐயின் நடவடிக்கையை எதிர்த்து ராகுலும் டிவீட் செய்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close