[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரிக்க வாய்ப்பு

p-chidambaram-bail-case-to-be-listed-in-arun-mishra-s-bench

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமின் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமணா தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி தொடர்பான வழக்கை விசாரித்து வருவதால் தற்போது உடனடியாக ப.சிதம்பரத்தின் மனுவை விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்திருந்தார். 

இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ளது. ப.சிதம்பரம்  வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை வேறு அமர்விற்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுப்பி வைப்பார் எனவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close