[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

வெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை

crocodile-enters-into-house-in-vadodara-rescued

குஜராத்தில் வெள்ளப் பெருக்கால் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

இந்தியாவின் வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு மீட்புக்குழுவினர் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் ஆற்றில் இருந்து முதலைகள் வெளியேறி குடியிருப்புகளுக்குள் நுழைந்தன. அதன்படி, வதோதரா பகுதி குடியிருப்பிற்குள் ஒரு முதலை சென்றதால் அங்கு வசிப்போர் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், முதலையை சாதுர்யமாக பிடித்தனர். பின்னர் பாதுகாப்பாக ஆற்றில் கொண்டுபோய் ‌விட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close