[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்!

jnu-should-be-renamed-mnu-after-pm-narendra-modi-hans-raj-hans

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றி பிரதமர் மோடியின் பெயரை வைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு), 1969 ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், டெல்லி வடமேற்கு தொகுதி பாஜக எம்.பியும் பஞ்சாபி பாடகருமான, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, காஷ்மீரில் 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்டது, யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவது குறித்து குறிப் பிட்டார். ஜவஹர்லால் அந்த காலத்தில் தவறு செய்துவிட்டதாக விமர்சித்தார்.

பின்னர் அவர் பேசும்போது, ’’காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். நம் முன் னோர்கள் செய்த தவறுகளுக்கு இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தின் பெயரை மோடி பல்கலைக்கழகம் என மாற்ற வேண்டும். மோடியின் பெயரில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்’’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close