[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மிரட்டும் தொனியை கைவிட வருமான வரித்துறையினருக்கு அறிவுரை

advice-to-income-tax-department

வருமான வரித்துறையினர் பொதுமக்களை மிரட்டும் தொனியில் அணுக கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருமானவரித்துறை மற்றும் மக்களிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தில் மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வருமான வரி தாக்கல் செய்வோர் குறிப்பிட்ட வருமானத்தை கணக்கு காட்டாதது கண்டறியப்பட்டால் உடனே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் எஸ்எம்எஸ் அனுப்பி நினைவூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மிரட்டும் தொனியிலான அணுகுமுறையை மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகளவில் பணப் பரிமாற்றம் குறித்து, வருமான வரி செலுத்துவோருக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கும் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருமானவரி தாக்கலில் மிகப்பெரிய முரண்பாடு இருந்து, அதற்கு உரிய ஆதாரங்கள் இருக்கிறது என்றால் மட்டுமே நோட்டீஸ் அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close