[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா!

ravindra-jadeja-recommended-for-arjuna-award

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரரை பெருமைப்படுத்தும் விதத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீரரான ஸ்மிரிதி மந்தனா அர்ஜூனா விருதை பெற்றார். இந்நிலையில் அர்ஜூனா விருதுக்கான பெயர் பட்டியலை பிசிசிஐ ஏற்கெனவே வழங்கியது. அதில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி, பும்ரா, ஆல்ரவுண்டரான ஜடேஜா பெண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பூணம் யாதவ் ஆகியோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அதில் துப்பாக்கி சுடும் வீரரான அஞ்சும் மோட்கில், ஹாக்கி வீரர் ஜிங்கென்சனா சிங், கால்பந்து வீரரான குர்பிரீத் சிங் சந்து உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

உலகக்கோப்பையை இந்தியா தோற்றாலும், தன்னுடைய ஆல்ரவுண்டர் திறமையால் இந்திய அணிக்கு பெரிய பலமாக இருந்தவர் ஜடேஜா. இந்திய மல்யுத்த வீரர் புனியா மற்றும் விக்னேஷ் போகத் ஆகியோர் மல்யுத்த பிரிவில் இருந்து ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்னர். இதில் புனியாவுக்கே ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close