[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

யார் அந்த துபாய் டான்? 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி!

mysuru-bizman-hired-4-gunmen-neighbours-were-wary-of-family

கர்நாடகத்தில் குடும்பத்தினரை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபரை துபாய் டான் மிரட்டி வந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகில் உள்ள தட்டாஹள்ளியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (36). இவர் தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65). அம்மா, ஹேமலதா. மனைவி நிகிதா (28). மகன் ஆர்ய கிருஷ்ணா (4 வயது). இவர், மைசூரு-ஊட்டி சாலையில் குண்டல்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வந்தார். அங்கு தங்கியிருந்த அவர், நேற்று காலை குடும்பத்தினரை துப் பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓம் பிரகாஷ் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

ஓம்பிரகாஷ், சில வருடங்களுக்கு முன் மைசூருவில் கொட்டிக்கெரே லேஅவுட்டில் குடியேறி, டேட்டா ஃபேஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் நஷ்டம். பின், நடிகர் ராஜ்குமாரின் பழைய படங்களை அனிமேஷன் செய்யும் நிறுவனத்தை நடத்தி னார். இதற்காக ரூ.60 லட்சம் கடன் வாங்கினார். இதிலும் நஷ்டம். இதற்கிடையே, உடுப்பியில் கிரானைட் தொழில் தொடங்க முடிவு செய்திருந்தார். இதற்காக துபாய் தொழிலதிபர் ஒருவரிடம் ஒப்பந்தம் போட்டு பணம் வாங்கியிருந்தார். அந்தப் பணத் தை பெற்றதில் இருந்து அவருக்கு ’துபாய் டானி’டம் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து துப்பாக்கியுடன் கூடிய நான்கு தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை தனக்குத் துணையாக வைத்துக்கொண்டார். இரண்டு பேர் அவருடன் பயணிப்பார்கள். இரண்டு பேர் வீட்டுப் பாதுகாப்புக்கு. இதனால் அக்கம் பக்கத்து வீட்டினர் அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை. 

இந்நிலையில் கடந்த வாரம் தனது கோவில்களுக்கு யாத்திரை சென்றுள்ளார். மூன்று  நாட்களுக்கு முன், குடும்பத்துடன் குண்டல்பேட்டைக்கு திரும்பியுள்ளார். தமிழ்நாடு பார்டரில் உள்ள விடுதி ஒன்றில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். தனது நண்பர் சேத்தனுடன் செல்போனில் பேசிய பிரகாஷ், கடன் தொல்லை அதிகரித்துள்ளது, சிலர் துரோகம் செய்துவிட்டார்கள், காலையில் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து நேற்று காலை 3 மணி அளவில் குடும்பத்தினரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண் டுள்ளார். ஓம்பிரகாஷ் துப்பாக்கியால் சுட்டபோது அவர் மனைவி நிகிதா நிறைமாத கர்ப்பிணி. அவரை ஓம்பிரகாஷ் சுட்டுக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. 

இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓம்பிரகாஷை மிரட்டிய அந்த துபாய் டான் யார்? தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன மாதிரியான சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close