[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சிகள் என்ன?

here-s-looking-back-at-the-historic-moments-that-defined-india

சுதந்திரம் பெற்று 73ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இந்தியா. நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த 73 ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள மாற்றங்கள் என்ன? 

1947 ஆகஸ்ட் 15க்கு பிறகு சுதந்திரக் காற்று வீசத் தொடங்கியதும் மக்களின் எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் இறக்கை கட்டிப் பறந்தன. அதில் முக்கியமான வளர்ச்சி, சாலைக் கட்டமைப்பில் ஏற்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பரந்து விரிந்த இந்தியாவில் வெறும் 36,000 கிலோ மீட்டர் நீளத்துக்கு மட்டுமே சாலை வசதி இருந்தது. இப்போது 12 மடங்கு அதிகரித்து சுமார் 40 லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சுதந்திரம் பெற்றபோது நாட்டின் மொத்த ரயில் பாதையின் நீளம், 53 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்தது. இப்போது அது 63 ஆயிரத்து 500 கிலோ மீட்டராக உயர்ந்திருக்கிறது. மொத்த இருப்புப் பாதையின் நீளம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் அதிகரித்திருக்கிறது. உலக அளவில் ரயில் பாதை நீளத்தில் இந்தியா 7ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்றபோது கொல்கத்தா, பம்பாய், டெல்லி, சென்னை விமான நிலையங்களே இருந்தன. ஆனால், இப்போது 20 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் மட்டும் திருவனந்தபுரம், ஹைதராபாத், கொச்சி, பெங்களூரு, சென்னை மட்டுமின்றி இப்போது 20 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மேலும், இந்தியாவில் இப்போதுள்ள மொத்த விமான நிலையங்கள் 123ஆக உயர்ந்திருக்கிறது.

சுதந்திரம் பெறும்போது அரபிக் கடலில் குஜராத், மகாராஷ்ட்ரா, கேரளா, வங்கக் கடலில் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் ஆகியவையே பிரதானமாக இருந்தன. இப்போது இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் 38. இவை தவிர 187 சிறிய துறைமுகங்களும் 23 பெரிய மீன்பிடி துறைமுகங்களும் 93 சிறிய மீன்பிடி துறைமுகங்களும் இருக்கின்றன.

சுதந்திரம் பெற்று 22 ஆண்டுகளுக்குப் பி‌றகுதான் 1969ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொடங்கப்பட்டது. அப்போது சைக்கிள் கேரியரிலும், மாட்டு வண்டிகளிலும் ராக்கெட்டின் பாகங்களை ஏற்றிக் கொண்டு போய், விண்வெளியில் சோதனை நடத்தியது இந்தியா. அதற்காக சர்வதேச நாடுகள் பலவற்றின் கேலிக்கும் ஆளான இஸ்ரோவை இன்று உலகமே திரும்பிப் பார்த்து வியக்கிறது. சமீபத்திய சந்திரயான் -2 திட்டத்தின் மூலம் நிலவை ஆராயும் இஸ்ரோவின் விண்வெளிச் சாதனைகள் ராக்கெட் வேகத்தில் பறக்கின்றன.

போக்குவரத்து, சாலைக் கட்டமைப்பு, உற்பத்தி, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், விவசாய தொழில்நுட்பம், மேலாண்மை, மருத்துவம், கல்வி என எல்லாத் துறைகளிலும் ஆங்கிலேயேர்கள் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து பல மடங்கு முன்னேற்றம் கண்டு, உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா மாற்றம் கண்டிருக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close