[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எமோஜி வெளியிட்ட ட்விட்டர்

twitter-launches-ashoka-chakra-emoji-for-73rd-independence-day

இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எமோஜி வெளியிட்ட ட்விட்டர்.

நாடு முழுவதும் நாளை 73 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக டிவிட்டர் பிரேத்யமான எமோஜியை வெளியிட்டுள்ளது. இந்த எமமோஜி அசோக சக்ராவை போற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது அத்துடன் இந்த எமோஜி வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நேரலையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த எமோஜி ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் கிடைக்கும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டிவிட்டர் மூத்த நிர்வாகி (Shagufta Kamran) சாகுவ்டா கம்ரான் கூறும் போது   ‘‘இந்த எம்மோஜிக்கள் மக்களின் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் கருவி. இது போன்ற அப்போதைய நிகழ்வுகளை கடத்தும் எம்மோஜிக்கள் இந்தியர்களுக்கு முக்கியம். மேலும் இந்த எம்மோஜிக்கள் சுதந்திர தினத்தை சிறப்புச் செய்வதோடு மொழி, கலாசாரங்கள் கடந்து அனைத்து இந்தியர்களை ஒன்றினைக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close