[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

‘தொட்டால் எரியும் பல்ப்’ - தெலங்கானாவில் வெளியான போலி செய்தி 

can-these-telangana-kids-really-generate-electricity

உடலில் பட்டதும் பல்ப் எரிவது சிறுவர்களின் சக்தி அல்ல. அது அந்த பல்பின் சக்தி என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக் சாந்த் பாஷா. தனது வீட்டில் இருந்த மின்விளக்கு செயலிழந்ததால் கடைக்குச் சென்று புதிய மின்விளக்கை வாங்கி வந்துள்ளார். அந்த மின்விளக்கை  வைத்து அவரது வீட்டில் இருந்த 7 வயதான மகன் சமீர் மற்றும் அவரது மகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் கையில் வைத்திருந்த பொழுது மின்சாரம் இல்லாமல் மின்விளக்கு ஒளிர்ந்தது. இந்தத் தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியதால் அப்பகுதி மக்கள் வியப்புடன் மின்சார மனிதர்களை பார்த்துச்சென்றனர். இது ஊடகம், சமூக வலைத்தளங்களிலிலும் பரவியது. உடலில் பட்டதும் பல்ப் எரிவது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கினாலும் இது எப்படி சாத்தியமானது என சிலர் கேள்வி எழுப்பினர்.

சில மருத்துவர்களும் கூட மேம்போக்கான விளக்கத்தையே அளித்தனர். உடலில் பட்டதும் பல்ப் எரிவது சிறுவர்களின் சக்தி அல்ல. அது அந்த பல்பின் சக்தி என்று விளக்கம் கொடுத்துள்ளது நியூஸ் மினிட் இணையதள செய்திப்பக்கம்.

விளக்கத்தின்படி, இந்த நிகழ்வை சித்தரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து பல்புகளும் இன்வெர்ட்டர் எல்.ஈ.டி பல்புகள், பொதுவாக அவசர விளக்குகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த விளக்குகள் பொதுவாக ஈரப்பதத்துடன் தொடர்பு கொள்ளும்போது ஒளிரும். ஈரம் பட்டதும் எரியும் பல்ப் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன.

அப்படிப்பட்ட பல்ப் என்பதாலே வியர்வையுடன் சிறுவர்கள் கைப்பட்டதும் பல்ப் எரிந்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்வெர்ட்டர் எல்.ஈ.டி பல்புகளை பலரும் பயன்படுத்தி அந்த வித்தையை செய்துகாட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close