[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

நீதிமன்ற புறக்கணிப்பு: ஹைதராபாத்தில் 11 நீதிபதிகள் இடைநீக்கம்

telangana-high-court-demand-hots-up-with-9-more-judges-suspension

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர பிரதேசம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிந்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தையும் இரண்டாக பிரிக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் வலுத்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த 3-ஆம் தேதி இரு மாநிலங்களுக்கும் நீதிபதிகளை நியமனம் செய்து அதற்கான அறிவிப்பும் வெளியானது.

இதில் ஆந்திர பகுதியினருக்கு அதிக முக்கியதுவம் தந்திருப்பதாக குற்றம்சாட்டி தெலங்கானா நீதிபதிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த உயர்நீதிமன்றம் 2 நீதிபதிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 9 நீதிபதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் தெலங்கானா மாநில நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மேலும் சில நீதிபதிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close