[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

கல்லூரி மாணவரை கடுமையாக தாக்கும் பேராசிரியர்..! (வீடியோ)

lecturer-in-telangana-caught-on-camera-attacking-intermediate-student

தெலங்கானாவில் கல்லூரி மாணவர் ஒருவரை, பேராசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

தெலங்கானாவின் ஜெக்டியல் பகுதியில் சாந்தி ஜூனியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதார பிரிவில் மனோஜ் குமார் படித்து வருகிறார். இவரது வகுப்பிற்கு வந்த பேராசிரியரான சித்தி ராஜூ என்பவர், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிவிப்பு குறித்து பேசிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது குறுக்கிட்ட மனோஜ் குமார், அதனை விரைந்து பேசி முடிக்குமாறு கூறியுள்ளார்.

 

 

இதனால் ஆத்திரம் அடைந்த பேராசிரியர் மனோஜ் குமாரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மனோஜ் குமாரின் சகோதரர் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசாரை நாடியுள்ளார். வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும் அந்த பேராசிரியர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close