[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தேசிய விருது வென்றவருக்கு செய்தி சொல்ல முடியாமல் தவிக்கும் இயக்குநர் 

kashmir-child-actor-has-won-national-award-but-he-may-not-know-it-yet

காஷ்மீர் விவகாரம் எதிரொலியால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது வென்ற காஷ்மீர் சிறுவனுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை எனப் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ‌ரத்து மற்றும் அம்மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மறுசீரமைப்பு சட்டத்தை அண்மையில் மத்திய அரசு இயற்றியது. இதனால் காஷ்மீரில் தற்போது தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களாக  தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தேசிய திரைப்பட விருது பட்டியலில் சிறந்த உருது மொழி படத்துக்கான விருது ஹமீத் என்ற திரைப்படத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தல்ஹா அர்ஹத் ரேஷி என்ற காஷ்மீர்‌ சிறுவனுக்கு சிறந்த குழந்தை நட்சத்தரத்துக்கான விருது அறிவிக்கப்பட்டது. 

ஆனால் சிறுவனுக்கு தகவலை தெரிவிக்க படக்குழுவினர் பெரும் சிரமப்பட்டுள்ளனர். காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சிறுவனை தொடர்பு கொள்ள முடியவில்லை எனப் படத்தின் இயக்குனர் இஜாஸ் கான் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close