[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பாலியல் வன்கொடுமை புகாரை கண்டுக்கொள்ளாத போலீஸ்: தற்கொலை முடிவெடுத்த பெண்

kanpur-woman-hangs-herself-after-police-inaction-against-molesters

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் தான் கொடுத்த பாலியல் புகார் மீது விசாரணை எடுக்காதததால் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் பெண் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு ரவுடி கும்பல் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததால் அவர் கடும் விரக்தியில் இருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். 

இந்நிலையில் அப்பெண் தற்போது தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை ஏடிஜிபி பிரகாஷ், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறிய காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தப் பெண்ணின் தற்கொலை குறித்து அவரின் குடும்பத்தினர், “இவள் கொடுத்த புகார் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே இவள் கடும் விரக்தியில் இருந்தார். இந்தச் சூழலில் இவள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” எனக் கூறியுள்ளனர். 

------

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close