[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

காங்கிரஸ் கட்சிக்கு இன்று புதிய தலைவர் தேர்வு?

congress-working-committee-to-take-up-leadership-issue-today

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது. இதில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் கூறியும் ஏற்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று நடை பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. புதிய தலைவராக, முகுல் வாஸ் னிக் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close