[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தீவிர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி அனுமதி

former-finance-minister-arunjaitley-is-admitted-in-the-icu

மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருண் ஜேட்லி அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் கடந்த ஆண்டு அவர் சிகிச்சை எடுப்பதற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு பதிலாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதனையடுத்து, நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அருண் ஜெட்லி போட்டியிடவில்லை. அவர் அமைச்சர் பதவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். உடல்நிலை சிக்கல் காரணமாக அரசியலில் இருந்து சற்றே ஒதுங்கி இருந்தார். 
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பாக எய்ம்ஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

அதில், இன்று காலை அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் குழு அருண் ஜெட்லியின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

                

அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரித்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close