சவுதி அரேபியாவில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபூபக்கர் என்ற பயணி விமான பயணத்தின் போது விமான பணிப்பெண்னிடம் கோமாளித்தனமாக நடந்துள்ளார்.அவரது கையைபிடித்து நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார். மேலும் அவரை தன்னுடன் செல்ஃபி எடுத்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். யாரோ தன்னை பின் தொடர்ந்து வருவதை உணர்ந்து அப்பெண் திரும்பி பார்த்துள்ளார்.அப்போது அபூபக்கர் மட்டும் பின்னால் நின்றுள்ளார் அந்த பெண் தனது இருக்கையில் அமர்ந்த பின் மீண்டும் அவர் தனது சில்மிஷங்களை தொடங்கியுள்ளார்.
மேலும் அவர் தனது வரம்பை மீறி செல்பட்டு அந்த பெண்ணின் தோல்பட்டையை பிடித்து செல்ஃபி எடுக்க வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது குழுவினரிடம் தெரிவித்தார். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் அந்த நபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..!
சச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..!
கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது
“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..!
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!