[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ரயில் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான் - இந்தியா மறுப்பு

samjhauta-express-shut-down-says-pak-minister-india-denies-claim

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சேவையை நிறுத்தியதாக பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே சம்ஜவுதா எகஸ்பிரஸ் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இந்தியா கடந்த செவ்வாய்கிழமை நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானிற்கான இந்திய தூதரை பாகிஸ்தான் திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது. அத்துடன் இந்தியாவுடனான வர்த்தகத்தையும் முறித்துக் கொள்ள திட்டமிட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை தற்போது பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகாவில் நிறுத்தியுள்ளதாக பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத், “நாங்கள் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். நான் ரயில்வே அமைச்சராக இருக்கும் வரை இந்த ரயிலின் சேவை மீண்டும் தொடராது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக வாகா எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா சார்பில் அந்த ரயிலிலுள்ள பயணிகளை அழைத்து வருதற்கு ஒரு ரயில் இஞ்சின் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தியா-பாகிஸ்தான் இடையே ரயில் நிறுத்தப்படவில்லை எனவும் இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சம்ஜவுதா ரயில் வாரம் இருமுறை இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தற்போது 110 பயணிகள் உள்ளனர். அத்துடன் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்ல 70 பயணிகள் காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close