[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

“மக்களின் நம்பிக்கையே ராமர் பிறந்த இடத்திற்கு ஆதாரம்” - உச்சநீதிமன்றத்தில் வாதம்

can-t-prove-ram-s-birthplace-after-so-many-centuries-believers-faith-is-evidence-ram-lalla-virajman-to-sc

பல நூற்றாண்டுகளுக்கு பிறகு ராமரின் பிறந்த இடத்தை எப்படி நிரூபிப்பது என்று உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

மத்தியஸ்தர்களின் சமரச முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அயோத்தி வழக்கின் விசாரணை, ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினம் தோறும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். அதன்படி நேற்று முதல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

                      

இன்றைய விசாரணையின் போது ராமர் கோயில் குழுவினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசரன் வாதாடினார். 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு பேசிய அவர், “பல நூற்றாண்டுகளுக்கு பின் ராமர் பிறந்த இடத்தை எப்படி நிரூபிக்க முடியும். மக்களின் நம்பிக்கையே ராமர் பிறந்த இடத்திற்கு ஆதாரம்” என்று கூறினார்.

‘இதேபோல், ஏசுநாதர் பெத்லகேம் பகுதியில் பிறந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்துள்ளதா? உலகில் உள்ள எந்த நீதிமன்றத்திலாவது அது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதா?’என நீதிபதிகள் வழக்கறிஞர் பிரசரனிடம் கேட்டனர். அப்போது, அது குறித்து தகவல்களை சேகரித்து சொல்வதாக மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close