[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

28 ஆயிரத்தை தாண்டியது தங்கம் - ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 568 உயர்வு 

gold-price-increased

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 568 உயர்ந்து, ரூ. 28, 352 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ஆயிரத்து 314 ரூபாய் விலை‌ அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 568 உயர்ந்து ரூ. 28, 352 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ71 உயர்ந்து ரூ. 3, 544 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு ரூ. 1.10 உயர்ந்து ரூ. 46.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள். சீனா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் டாலரை விற்று தங்கத்தை வாங்கி குவித்து வருவதும் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர் சார்ந்த அச்சங்களும் தங்கத்தின் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே பொருளாதா நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close