[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா ராஜினாமா

congress-mp-bhubaneswar-kalita-resigns-from-rajya-sabha

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு, காங்கிரஸ் கொறடா எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மாநிலங்களவையில் அமித்ஷா இன்று அறிவித்தார். குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசும் இதற்கான அறிவிப்பாணையை வெளிட்டுள்ளது. 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் கொறடா புவனேஸ்வர் கலிட்டா எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தள்ளார்.  நாட்டு மக்களின் உணர்வை காங்கிரஸ் கட்சி புண்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close