[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பிக்கள் கட்டாயம் ஆஜராக, கொறடா உத்தரவு

members-should-be-present-in-parliment-bjp-order-their-mp-s

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று பேச இருப்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக எம்.பிக்கள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல்லா ,மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்றுகாலை ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவுகள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என கூறப் படுகிறது. அப்போது கடும் அமளி ஏற்படும் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக எம்.பிக்கள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று அந்தக் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close