[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

‘ஜூன் மாதம் மட்டும் பயங்கரவாதத்திற்கு எதிராக 44 நடவடிக்கைகள்’ - உள்துறை அமைச்சகம்

44-actions-against-terrorism-in-june-alone-home-ministry

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சகம் அதிக அளவிலான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் நானூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், மத்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து, கடந்த ஜூன் மாதம் மட்டும் ‌நாடு முழுவதும் 44 பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

2016-ஆம் ஆண்டு ‌ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை சராசரியாக மாதத்திற்கு 11 பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பயங்கரவாத தடுப்பு முகமை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் 278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 204 வழக்குகளில் ‌குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய உள்து‌றை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட 221 பேரில் 92 பேர் தண்டனை பெற்றுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close