[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல்: கண்ணீர் விட்ட வெங்கையா

vengaiah-naidu-cry-for-jeibal-reddy-death

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவித்தபோது அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டார்.

இன்று மாநிலங்களவை கூடியதும், ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் குறிப்பு வாசித்தார். பிறகு, ஆந்திர அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஜெய்பால் ரெட்டியுடன் தனக்கிருந்த நெருக்கம் குறித்து வெங்கையா நினைவு கூர்ந்தார்.

முன்பெல்லாம் ஆந்திர பேரவை காலை 8 மணிக்கு கூடும் என்றும் 7 மணிக்கே உணவகத்தில் சந்தித்து பேரவையில் பேச வேண்டிய விவகாரங்கள் குறித்து விவாதிப்போம் என்று வெங்கையா நாயுடு கூறினார். அப்போது நாதழுதழுக்க வெங்கய்யாவின் குரல் கம்மிய நிலையில், கண்ணீர் விட்டு அழுதார்.

ஜெய்பால் ரெட்டியுடனான 40 ஆண்டு கால நட்பைக் குறிப்பிட்டதால் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறிய மாநிலங்களவைத் தலைவர், ஜெய்பால் ரெட்டியின் மறைவு தன்னை பெரிதும் பாதிக்கச் செய்வதாகக் குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close