[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

இன்சூரன்ஸ் பணத்துக்காக பெற்றோர் கொலை : கொடூர மகன் கைது

son-killed-his-parents-for-insurance-money-in-andhra

இன்சூரன்ஸ் பணத்துக்காக மகனே, பெற்றோரை கொலை செய்து நாடகமாடி‌ய‌ கொடூரம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த வெங்கட் ரெட்டி - ஆதியம்மா தம்பதியின் மகன் நாராயண ரெட்டி. தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், மது அருந்த பணம் கேட்டு வீட்டில் அடிக்கடி பிரச்னை செய்து வந்துள்ளார். இத‌னால் அவரது மனைவி ‌6 மாதங்களுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டார். இந்தச் சூழலில்‌, தான் பணிபுரிந்த நிதி நிறுவனத்தில் இருந்து மூன்று லட்ச ரூபாயை நாராயணரெட்டி சொந்தத் தேவைக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தொகையை திருப்பித் தரும்படி நிதி நிறுவனம் அழுத்தம் கொடுத்துள்ளது. 

இந்தச் சூழலில் தனது தாய் மீது தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் 15 லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ் கட்டிய நாராயணரெட்டி, சில மாதங்களுக்குப் பிறகு தாயைக் கொன்றுவிட்டு இன்சூரன்ஸ் பணத்தை பெறலாம் என திட்டமிட்டிருக்கிறார். கடந்த 21-ஆம் தேதி தூக்க மாத்திரைகளை மோரில் கலந்து தனது தாய் ஆதியம்மாவிற்கும் தந்தை வெங்கட் ரெட்டிக்கும் கொடுத்துள்ளார். இதனை குடித்தும் பெற்றோர் உயிரிழக்காததால், அவர்கள் இருவரையும் மணிக்கட்டு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். 

பின்னர் வீட்டின் வெளியே வந்து படுத்துறங்கிய அவர், மறுநாள் காலை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் தங்களது தாய் தந்தையை கொலை செய்து வீட்டில் இருந்த ஐந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாக நாடகமாடினார். இதுகுறித்து தரிசி காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதனடிப்‌படையில் விசாரணை நடத்திய காவல்துறைக்கு, நாராயண ரெட்டி மீதே சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோரை கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து நாராயண ரெட்டியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close