[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

காதலியுடன் வாழ்ந்த கணவர் - வீடு புகுந்து சரமாரியாக அடித்த மனைவி 

kukatpally-woman-thrashes-husband-over-extramarital-affair

கணவரையும் , அவரின் காதலியையும் இளம்பெண் ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த லஷ்மனும், சுஜனாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. எதிர்பார்த்ததைப்போல் இவர்களின் இல்வாழ்க்கை இனிக்கவில்லை. சில காலம் மட்டுமே சுஜனாவுடன் வாழ்ந்த லஷ்மன், திடீரென அவரை பிரிந்து சென்றுவிட்டார். அதுகுறித்து விசாரித்தபோது, லஷ்மன், வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், கூக்கட்பள்ளியில் உள்ள அவரின் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதும் தெரியவந்தது. 

அதிர்ச்சியடைந்த சுஜனா, தன்னோடு சேர்ந்து வாழுமாறு லஷ்மனனிடம் கெஞ்சியுள்ளார். காதல் கண்களை மறைத்துவிட்ட காரணத்தால், மனைவியை கண்டுக்கொள்ளாத லஷ்மன், காதலியைப் பிரிய மறுத்துவிட்டார். விரக்தியடைந்த சுஜனா விவாகரத்து கேட்டு லஷ்மனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதை ஒரு பொருட்டாக எண்ணாத லஷ்மன், சுஜனாவுக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 

ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற சுஜனா, லஷ்மனின் காதலி வீட்டிற்குள் உறவினர்களுடன் அதிரடியாக புகுந்தார். இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கப்பட்டு, பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். லஷ்மனின் காதலி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. மனைவி இருக்கும்போதே வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்த லஷ்மனிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close