[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

காஷ்மீர் விவகாரம்.. மோடி உதவி கேட்டார் என்ற டிரம்ப் பேச்சுக்கு இந்தியா மறுப்பு

pm-did-not-ask-trump-to-mediate-on-kashmir-india-counters-us-president

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவின் உதவியை இந்திய பிரதமர் மோடி கேட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் டிரம்ப்பின் உதவியை மோடி ஒரு போதும் கோரவில்லை என வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை இம்ரான் கான் சந்தித்து பேசினார். இதில் பயங்கரவாத ஒழிப்பு, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், 2 வாரங்களுக்கு முன் ஜப்பானில் மோடியை சந்தித்த போது, காஷ்மீர் பிரச்னை நெடுங்காலமாக நீடித்துக்கொண்டிருப்பதாகவும் அதில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா என அவர் கேட்டார் என்றும் தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் சேர்ந்து தன்னை மத்தியஸ்தத்திற்கு அழைத்தால் அதற்கு தயாராக இருப்பதாக தாம் தெரிவித்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

அப்போது அருகில் அமர்ந்திருந்த இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முன் வந்தால் பாகிஸ்தான் அதை வரவேற்கும் எனத் தெரிவித்தார். இதற்கிடையில் இவ்விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டரில் விளக்கம் ஒன்றை வெளியிட்டார். அதில் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் படி டிரம்ப்பிடம் பிரதமர் மோடி ஒரு போதும் கேட்டுக்கொள்ளவில்லை என ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் உள்ள பிரச்னைகளை இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதாக ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் அடிப்படையிலேயே இரு நாட்டு பிரச்னைகளுக்குகான தீர்வு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் கொள்கை என்ன என்பது உலகுக்கே தெரியும் என்றும்அ மெரிக்காவின் தலையீட்டை மோடி நாடினார் என்ற டிரம்ப்பின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்றும் மனக்குழப்பத்தில் பேசியுள்ளது போல் உள்ளதாகவும் அமெரிக்க எம்பி பிரட் ஷெர்மேன் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close