[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

மும்பை தொலைபேசி இயக்கக கட்டடத்தில் தீவிபத்து... 60-க்கும் அதிகமானோர் மீட்பு

fire-in-mumbai-building-60-rescued

மும்பையில் உள்ள தொலைபேசி இயக்கக கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 60-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

பாந்த்ரா புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள எம்டிஎன்எல் தொலைபேசி இயக்கக கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அறையில் இருந்தவர்கள் தங்களை காத்துக்கொள்ள மொட்டைமாடியில் தஞ்சமடைந்தனர். கட்டடத்தில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகின. இதையடுத்து அங்கு வந்த 14 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டன. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தீயை அணைக்கும் ரோபோவும் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டது.

கட்டடத்தில் சிக்கியிருந்த 60-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பணியில் ஈடுபட்ட படுகாயமடைந்த தீயணைப்புப் படை வீரர் ஒருவர் மருத்து‌மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close