[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

‘உணர்வாலும் உத்வேகத்தாலும் இந்தியன்’: சந்திரயான்-2 குறித்து பிரதமர் மோடி

pm-modi-wishes-successful-launch-of-chandrayaan-2

சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று மதியம் சரியாக 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனைவரும் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய நாட்டின் வரலாற்ரில் இது ஒரு முக்கிய நிகழ்வு. சந்திரயான் விண்ணில் ஏவப்பட்டது இந்திய விஞ்ஞானிகளின் திறமை மற்றும் சக்தியை உலகத்திற்கு வெளிப்படுத்துகிறது. 

மேலும் இவர்களின் இந்தச் சாதனை இளைஞர்களை அறிவியல் துறைக்கு வருவதை ஈர்க்கும். இந்த விண்கலம் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது மிகப் பெரிய சிறப்பு. சந்திரயான்-2  ‘உணர்வால் இந்தியன் உத்வேகத்தால் இந்தியன்’ ” எனப் பதிவிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close