[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

''அபராதம் செலுத்தி கைதிகளுக்கு விடுதலை'' - வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய தொழிலதிபர்

up-businessman-pays-bail-money-of-17-inmates-on-his-73rd-birthday

அபராதத்தொகையை செலுத்தி 17 கைதிகளை விடுவித்து தன் பிறந்தநாளை தொழிலதிபர் ஒருவர் வித்தியாசமாகக் கொண்டாடினார்.

உத்திரப்பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த தொழிலதிபர் மோதிலால் யாதவ். இவர் தனது 73வது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார். சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு தண்டனைக்காலம் முடிந்தும் அபராதம் செலுத்தாததால் பலர் சிறையில் இருக்கிறார்கள். அப்படி மாவட்ட சிறையில் இருந்த 17 பேருக்கு ரூ.35 ஆயிரம் பணம் செலுத்தி மோதிலால் விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளார் 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மோதிலால், ''என் மகன் ஒரு வழக்கறிஞர். அபராதம் செலுத்தாமல்  சிறையில் இருக்கும் கைதிகள் பற்றி அவரிடம் இருந்து தெரிந்து கொண்டேன். அதனால் எனது பங்களிப்பு மூலம் சிலரை விடுதலை செய்ய முடிவெடுத்தேன் .அவர்கள் நிச்சயம் மீண்டும் குற்றங்கள் செய்ய மாட்டார்கள்'' என தெரிவித்துள்ளார்.

(மோதிலால்)

மோதிலாலின் வித்தியாசமான பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து பேசிய சிறைக்காவல் கண்காணிப்பாளர், ''மோதிலால் சிறைக்கதிகளை விடுதலை செய்து பிறந்தநாளைக்கொண்டாட விரும்பினார். அதற்காக அவர் ரூ.35 ஆயிரம் தொகை செலுத்தி 17 கைதிகளை விடுதலை செய்தார். கடந்த 2 வருடத்தில் மொத்தம் 232 கைதிகள்  ரூ.8.50 லட்சம் செலுத்தி விடுதலை ஆகியுள்ளனர்'' என்று தெரிவித்தார்
            

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close