[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

சாலை வசதி இல்லை: தொட்டில் கட்டி தூக்கிச்செல்லப்பட்ட கர்ப்பிணி

a-pregnant-woman-carried-for-more-than-6-km-by-makeshift-stretcher

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கர்ப்பிணி பெண்ணை துணியால் கட்டப்பட்ட தொட்டிலில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது

ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள கோத்தவல்சா கிராமத்தில் உள்ள கர்ப்பிணி பெண்மணி ஒருவர் வலியால் துடித்துள்ளார். அந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் செல்ல வசதி இல்லை. அதனால் துணியால் மரக்கட்டையில் தொட்டி ஒன்றைக்கட்டிய உறவினர்கள், கர்ப்பிணியை அதில் படுக்கவைத்து தூக்கிச்சென்றனர். 

சுமார் 6 கிமீ தொட்டிலில் சுமந்து சென்று அருகில் உள்ள கேஜே புரம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிரசவத்துக்கு பிறகு தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close