[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தெருநாய்கள் கடித்துக் குதறிய பச்சிளங் குழந்தை - சிகிச்சை தீவிரம் 

girl-child-in-haryana-thrown-into-drainage-ditch

ஹரியானா மாநிலம், கய்தால் நகரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தையை சாலையோர கழிவுநீர்க் கால்வாயில், பெண் ஒருவர் வீசிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கய்தாலில், நெருக்கமான வீடுகள் நிறைந்த ஒரு தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இக்காட்சி பதிவாகி உள்ளது. அதில், இரவு நேரத்தில் ஆள் நடமாட்டத்தை நோட்டமிட்டபடியே வரும் பெண் ஒருவர், பச்சிளங் குழந்தையை துணியில் சுற்றி அங்குள்ள தெருவோர கழிவுநீர்க் கால்வாய் அருகே இரக்கமின்றி வீசிவிட்டுச் செல்கிறார். 

அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் கண்டுகொள்ளாத நிலையில், தெருநாய்கள் அக்குழந்தையை கடித்துக் குதறுகின்றன. நல் வாய்ப்பாக அப்பகுதியிலுள்ள சிலரால், படுகாயங்களுடன் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அந்தப் பச்சிளம் பெண் குழந்தையின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கய்தால் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். பெண்கள் நாட்டின் கண்கள் எனும் குரல் பரவலாக ஒலிக்கும் நிலையில், ஒரு பச்சிளம் பெண் குழந்தைக்கு நேர்ந்துள்ள கதி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close