[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு

karnataka-congress-petition-to-supreme-court-judgement

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது என கர்நாடக காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில், தன் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் குமாரசாமி நேற்று கொண்டு வந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என பாஜகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர். அதே நேரத்தில் ஆளுநரின் வேண்டுகோளுக்கு எதிராக பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முதல்வர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் கடிதம் எழுதினார்.

அதனையடுத்து, இரண்டாவது நாளாக இன்று கர்நாடக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. முதல்வர் குமாரசாமி அவையில் பேசினார். ஆளுநரின் அறிவுறுத்தலின்படி நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், விவாதம் முடியும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் ரமேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது என கர்நாடக காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “அதிருப்தி எம்.எல்.ஏக்களை அலுவல்களில் கலந்து கொள்ள வேண்டும் என யாரும் நிர்பந்திக்க முடியாது என்று கூறியிருக்கிறீர்கள். எம்.எல்.ஏக்களை கலந்து கொள்ளுமாறு உத்தரவிட கொறடாவுக்கு கூட அதிகாரம் இல்லையா என்பதை தெளிவாக கூறவில்லை. 15 எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்ற உத்தரவு குறித்து விளக்கம் தேவை. அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பது போல் இருக்கிறது”  எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

நாளையும் நாளை மறுநாளும் உச்சநீதிமன்றம் விடுமுறை என்பதால் பெரும்பாலும் இந்த வழக்கு திங்கள் கிழமையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close