[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

பாபர் மசூதி இடிப்பு வழக்கு - 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

supreme-court-today-in-its-order-said-that-the-verdict-in-the-babri-masjid-demolition-case-involving-bharatiya-janata-party-bjp-leaders-l-k-advani-m-m-joshi-and-others-must-be-delivered-within-nine-months-from-today

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமை வாய்ந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை ரேபர்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ., உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

                        

அப்போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை விரைவில் முடித்து இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது வருகிறது. 

                              

இந்நிலையில், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தொடர்பான வழக்கை கீழ் நீதிமன்றம் 9 மாதத்தில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close