[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

எங்கள் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்திவிட்டது  - கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் அமளி 

congress-tumult-in-karnataka-assembly

எங்கள் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தி விட்டதாக கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டுள்ளது. 

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தக் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். அதனை கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து தங்கள் பதவி விலகல் கடிதத்தை ‌ஏற்றுக் கொள்ளும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி 15 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அவ்வாறு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது குறித்து எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியது.

இதையடுத்து இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், கலந்து கொள்ளப் போவதில்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்க ளும் அறிவித்து விட்டனர். இந்த பரபரப்புக்கிடையே கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது. நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் காரசாரமாக பேசினார். 

இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் கமிட்டி சட்டப்பேரவை குழு தலைவர் சித்தராமையா நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எம்.எல்.ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு கொறடா உத்தரவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் கட்சித்தாவல் சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் தற்போது காங்கிரஸ் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தி விட்டதாக கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. நேற்றுவரை எங்களுடன் இருந்த எம்.எல்.ஏ ஸ்ரீமத் பாட்டீல் தற்போது மும்பையில் உள்ளார். அவரை பாஜக கடத்திவிட்டது எனக்கூறி எம்.எல்.ஏவின் புகைப்படங்களை காட்டி அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பாஜக மோதலையடுத்து அவை அரைமணிநேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close