[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

வருமான வரித்துறை பிடியில் மாயாவதி உடன்பிறப்பு

mayawati-s-brother-is-in-it-department-control

பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவியான மாயாவதியின் தம்பி வருமான வரித்துறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

டெல்லியில் மாயாவதியின் தம்பியான ஆனந்த் குமார் மற்றும் அவரது மனைவியின் பெயரில் பினாமி சொத்துக்கள் உள்ளதாகவும், அவை வருமான வரித்துறையினரின் பிடியில் உள்ளதாகவும் ஜூலை 16 ஆம் தேதி டெல்லி பினாமி தடைபிரிவு தகவல் வெளியிட்டது. அதில் டெல்லியில் அவர்களின் பெயரில் இது 28,328.07 சதுர மீட்டர் அல்லது சுமார் 7 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், இது போன்று ரூ.400 கோடி அளவிற்கு மேல் சொத்துக்களை அவர்கள் பெயரில் இணைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஆனந்த் குமாரின் ரூ.1,300 கோடி வருமானத்தை வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக 2007 முதல் 2014 வரை ஆனந்த்குமாரின் சொத்துமதிப்பு ரூ.7.1 கோடியிலிருந்து 1,300 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இது 18,000 சதவீதத்திற்கும் மேலானது என்றும் வருமான வரித்துறை தனது விசாரணையில் குற்றஞ்சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் மாயாவதியின் தம்பியான ஆனந்த்குமார் இயக்குநராக இருந்த 12 நிறுவனங்களும் வருமான வரித்துறையினரின் கண்காணிப்பில் உள்ளன. 

குறிப்பாக ஃபேக்டர் டெக்னாலஜிஸ், ஹோட்டல் லைப்ரரி, சச்சி புராபர்டீஸ், தியா ரியல் எஸ்டேட் மற்றும் இஷா புராபர்டீஸ் ஆகிய 5 நிறுவனங்களைப் பயன்படுத்தி பெரும் சொத்து சேர்த்துள்ளது என்றும் அதன் விசாரணையின் போது ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதனை தொடர்ந்து “Rs 400” என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close