[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

அயோத்தி வழக்கு: சமரச குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்

ayodhya-case-conciliation-committee-filed-report

அயோத்தி வழக்கில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவின் இடைக்கால அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்திற்கு உரிமை கோரும் வழக்கில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 8ஆம் தேதி நியமித்தது. வாழும்‌ கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் அந்தக் குழுவில் இடம் பெற்றனர்.

இந்நிலையில் 3 பேர் கொண்ட சமசரக் குழு உச்சநீதிமன்றத்தில் இன்று தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து ஜூலை 31-ஆம் தேதி சமரசக் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் அயோத்தி வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close