[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

வெள்ளத்தில் மிதக்கும் அசாம் - சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

20-killed-4-6-million-affected-by-heavy-rains-in-assam

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் 3‌3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. சுமார் 43 லட்சம் மக்கள் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சம் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் பர்பேட்டா மாவட்டமே அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்கு மட்டும் சுமார் 12 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. 

பல கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் செய்வதறியாது மக்கள் தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அஸ்ஸாம் முதலமைச்சர் சோனாவால் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். இதனை அடுத்து முதல்கட்டமாக அஸ்ஸாம் மாநிலத்தில் மீட்பு பணிகளுக்கு என 251 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவித்துள்ளது. 

இதனிடையே அஸ்ஸாம் நிலவரம் குறித்து ஆய்வு செய்துள்ள ராணுவம் , மீட்பு பணிகளுக்கு ராணுவத்தினரை அனுப்பியுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவத்தினரும் மீட்பு பணிகளை தொடங்கியுள்ளனர். அஸ்ஸாமின் கஜிரங்கா தேசிய பூங்காவில் 90 சதவிகித பகுதி நீரில் மூழ்கியிருப்பதால் ஆயிரக்கணக்கான விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

சுமார் 20 விலங்குகள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பேரவைத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close