[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் 67 பேர் உயிரிழப்பு 

67-dead-as-imd-sounds-red-alert-in-flood-affected-north-east-bihar-and-uttar-pradesh

பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் 67 பேர் உயிரிழந்துள்ளனர். 

தென்மேற்கு பருவமழையால் பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அசாமின் லட்சுமிபூர், சோனித்பூர், ஜோர்ஹாட், திப்ருகார், சிவசாகர் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த மழையால் சுமார் 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த மழையால் இதுவரை மொத்தமாக 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு நிவாரண பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. அசாம் மாநிலத்தை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் சேகாவத், அசாம் மாநிலத்திற்கு 251 கோடி நிவாரண நிதியை உடனடியாக அம் மாநிலத்தின் பேரிடர் மீட்பு பணி தொகைக்கு அளித்துள்ளார். எனினும் இந்தப் பகுதிகளில் பருவமழை மேலும் இரண்டு நாட்களுக்கு தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close