[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி

slapping-competition-in-kyrgyzstan

கிர்கிஸ்தானில் ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி நடைபெற்றது.

நீங்கள் எத்தனையோ போட்டிகளில் விளையாடி இருப்பீர்கள். ஆனால் இந்தப் போட்டி சற்று வித்தியாசமானது. அதாவது ஒருவரையொருவர் கன்னத்தில் அறைய வேண்டும். இதுதான் போட்டியின் விதிமுறை. போட்டியின்படி, எதிரில் இருப்பவரை கன்னத்தில் ஓங்கி பளாரென அறைய வேண்டும். அவரும் நிலை தடுமாறாமல் அடியை பொறுத்து கொண்டு நிற்க வேண்டும். முதலில் அடி வாங்கிய நபர், பின்னர் எதிரில் இருப்பவரை முழு பலத்துடன் கன்னத்தில் அறைய வேண்டும் என்பதே போட்டி விதி. ஒருவருக்கு 5 முறை வாய்ப்புகள் வழங்கப்படும்.

கிர்கிஸ்தானின், பிஸ்கெக் பகுதியில் நடைபெற்ற இந்தப் போட்டியை முன்னாள் குத்துச்சண்டை வீரர்கள் ஒருங்கிணைத்தனர். 10-க்கும் அதிகமான ஆண்கள் இதில் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற பலருக்கு கன்னம் வீங்கியது. சிலருக்கு பற்கள் உடைந்தன. 23 வயதான அமன் அய்தரோவ் கன்னத்தில் அறையும் இந்தப் போட்டியில் வென்றார். ரஷ்யாவில் சமீப காலமாக இப்போட்டி பிரபலமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close