[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

''என் கணவரின் பணியை தொடர்வேன்'' - இறந்த விமானியின் மனைவி எடுத்த சபதம்!

garima-abrol-wife-of-deceased-squadron-leader-set-to-join-indian-air-force

5 மாதத்துக்கு முன்பு போர் விமான சோதனையின் போது உயிரிழந்த விமானியின் மனைவி தானும் விமானியாக ஆகவுள்ளது குறித்து எழுத்தாளர் ஒருவர் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

5 மாதத்துக்கு முன்பு மிரேஜ் 2000 போர்விமான சோதனையில் போது ஏற்பட்ட விபத்தில் விமானி சமிர் அப்ரால் உயிரிழந்தார். தனது கணவரின் பணியை தான் தொடரவுள்ளதாக அவரின் மனைவி கரிமா அப்ரால் தெரிவித்துள்ளார். இதற்காக கரிமா, அதற்கான நேர்முகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் விமானப்பட்டை அகாடமியில் 2020ம் ஆண்டு சேரவுள்ளார். பயிற்சி முடிந்ததும் விரைவில் இந்திய விமானப்படையில் சேர்ந்து தனது கணவரின் சேவையை தொடரவுள்ளார் கரிமா அப்ரால்.

சமூக வலைதள பக்கத்தில் கடைசியாக பதிவிட்டுள்ள கரிமா, ''என் கண்ணீர் இன்னமும் காயவில்லை. ஒரு கோப்பை தேநீரை கையில் கொடுத்தப்படி எனது கணவரை இந்த நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினேன்'' என பதிவிட்டுள்ளார்.

விமானப்படையில் சேரவுள்ளது குறித்து எழுத்தாளர் ஸ்வப்னில் பாண்டேவுடன் பேசிய  கரிமா , ''எனது கணவரது வாழ்க்கை எப்படி இருந்தது என பார்க்க விரும்பினேன். அவர் அணிந்த அதே சீருடையை அணிவது என்னை ஊக்கப்படுத்தும். மரபுகளை தொடர விரும்பினேன்'' என தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய எழுத்தாளர், ''நம்மில் பலர் ஒரு வாய்ப்பை இழந்தால் வாழ்வதற்கான வைராக்கியத்தை இழக்கிறோம். ஆனால் இந்த போர் விமானியின் மனைவி தன் கண்ணீரைத்துடைத்துக்கொண்டு கணவனின் சேவையை தொடரவுள்ளார். போலியான பிரபலங்களை சுற்றுவதைக் காட்டிலும் இது போன்ற பெண்களை சந்தித்து உத்வேகம் அடைய வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு இப்படியான பெண்கள் குறித்து கற்பிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close