[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ஆதார் எண்ணை தவறாக அளித்தால் ரூ10 ஆயிரம் அபராதம் - மத்திய அரசு திட்டம்

government-to-impose-penalty-for-misquoting-aadhaar

ஆதார் எண்ணை தவறாக வழங்கினால் அபராதம் விதிக்கும் நடைமுறை செப்டம்பர் முதல் அமலாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்கள் மட்டுமில்லாமல் வாழ்வின் பல்வேறு விஷயங்களுக்கும் ஆதார் எண் முக்கியமானதாக மாறிவருகிறது. கார், வீடு உள்ளிட்டவற்றை வாங்கும் போது அதிகப்படியாக பணப் பரிமாற்றம் செய்வதற்கு பான் கார்டிற்கு பதிலாக ஆதார் கார்டும் பெறப்படுகிறது.

இந்நிலையில், ஆதார் எண்ணை தவறாக கொடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த அபராதம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறை தவறாக எண்ணை வழங்கும் போதும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

                     

இனி பான் கார்டுகளுக்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என மத்திய அரசு ஜூலை 5 ஆம் தேதி கூறியிருந்த நிலையில், அதற்கேற்ற சட்டவிதிகள் திருத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நாட்டில் மொத்தம் 120 கோடி பேருக்கு ஆதார் அட்டை உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார். ஆனால், பான் கார்டினை 22 கோடி பேர் மட்டுமே வைத்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close