[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு

tell-your-goons-to-back-off-bjp-mla-s-daughter-fears-for-life-after-marrying-dalit

உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏவின் மகள் தன்னை கொலை செய்ய தனது தந்தை திட்டமிட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் பித்தாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள் சாக்‌ஷி மிஸ்ரா அண்மையில் அஜிதேஷ் குமார் என்பவரை திருமணம் செய்தார். அஜிதேஷ் குமார் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இந்தத் திருமணத்திற்கு ராஜேஷ் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 

 (ராஜேஷ் மிஸ்ரா எம்.எல்.ஏ)

இந்நிலையில் சாக்‌ஷி மிஸ்ரா சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய திருமணத்தை எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எனது தந்தை சில ரவுடிகளை ஏவி விட்டு எங்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆகவே எங்களுக்கு மாவட்ட எஸ்பி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் இந்த வீடியோவில் சாக்‌ஷி,“என்னுடைய உயிருக்கோ அல்லது எனது கணவரின் உயிருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எனது தந்தைதான் காரணம். அப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் அவரை நான் சட்டத்திற்கு முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்று தருவேன்” எனக் கூறியுள்ளார். இதனையடுத்து இவர்கள் சார்பில் இன்று அலாகாபாத் நீதிமன்றத்தில் பாதுகப்பு அளிக்க கோரி ஒரு பொதுநல மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close