[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா

all-jd-s-minsters-have-resigned-like-the-21-congress-ministers-who-had-resigned

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். 

கர்நாடகா அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆளும் மத சார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 அமைச்சரகளும் ராஜினாமா செய்தனர். 

இந்நிலையில், தற்போது மத சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். கர்நாடகா அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களில் முதலமைச்சர் குமராசாமி தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகா அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close