[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கர்நாடகாவில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!

all-ministers-has-resigned-in-karnataka

கர்நாடகாவில் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சரான மத சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, அமெரிக்கா சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களு ம், மதசார்பாற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அவ சரமாக பெங்களூரு திரும்பிய குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் கா‌ங்கிரஸ் மூத்த தலை‌‌வர்களுடன் அடுத்தக் கட்‌ ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். 

இதி‌ல், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகவுடா, துணை முதல‌வர் பரமேஸ்வ‌ரா, முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி யில், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை செயல்படுத்தும் வகையில், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் எனத் தெரிகிறது. 

இதனிடையே, மும்பையில் முகாமிட்டுள்ள 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளனர். ராஜி னாமா முடிவை திரும்ப பெறப்போவதில்லை என்றும், அவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பாட்டில் கூறியுள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், ஏலகங்காவில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. மேலும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓட்டலி லேயே தங்கியிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

(மும்பைக்கு விமானம் ஏறும் நாகேஷ்)

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட சுயேச்சை எம்.எல்.ஏவான நாகேஷ், தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்த அவர், பின்னர் விமானம் மூலம் மும்பை சென்றுள்ளார். 

இந்நிலையில் ஏற்கனவே 13 எல்எல்ஏக்கள், ஒரு அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close