[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

காங். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா 

after-milind-deora-steps-down-jyotiraditya-scindia-quits-as-congress-general-secretary

காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பதவியை ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். 

கடந்த 3ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தா‌ம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் அவர் கூறினார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பதவியை ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்பதாகவும் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். தமது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்திருக்கும் சிந்தியா, அவர் தன்மீது நம்பிக்கை வைத்து கட்சிப் பொறுப்புகள் அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். 

முன்னதாக மும்பை காங்கிர‌ஸ் தலைவர் மிலந்த் தியோரா பதவி விலகியதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதையடுத்து கட்சியில் இருக்கும் ‌முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து‌‌ வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close