[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

பாலகோட் தாக்குதலால் பயம்: பயிற்சி முகாமை ஆப்கானுக்கு மாற்றிய பயங்கரவாத அமைப்புகள்!

pakistani-terrorists-being-trained-in-afghanistan-after-balakot

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அடுத்து, தங்கள் பயிற்சி முகாம்களை, பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் மாநிலம புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்- இ- முகமது பயங் கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. 

இதையடுத்து இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத பயிற்சி முகாமை குறிவைத்து குண்டு வீசியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தை அடுத்து, ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தங்கள து இடத்தை ஆப்கானிஸ்தானுக்கு மாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் உள்ள குனார், நங்கர்கர், நுரிஸ்தான், கந்தகார் ஆகிய மாகாணங்களில் தங்கள் முகாமை இந்த பயங்கர வாத அமைப்புகள் மாற்றியுள்ளன. அங்குக் கொடூர தாக்குதல் பயிற்சிகளை அளித்துவருகின்றன. இதையடுத்து கந்தகார் மற்றும் காபூலில் உள்ள இந்திய தூதரகங்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close