[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

செல்ஃபோனால் கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்: 2 நாட்களுக்கு பின் மீட்பு

man-falls-into-well-rescued-after-three-days

செல்ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த இளைஞர், நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவனந்தபுரம் அருகிலுள்ள கொஞ்சிரா நாலுமுக்குவிளை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (38). எப்போதும் செல்ஃபோனை நோண்டிக்கொண்டே இருப்பாராம். கடந்த புதன்கிழமை இவர் அம்மா சரளா, பக்கத்து ஊரிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தனியாக இருந்த பிரதீப், ஊரின் அருகில் இருந்த கிணற்றின் சுவரில் ஹாயாக அமர்ந்து, வழக்கம் போல செல்போனை நோண்டிக் கொண்டிருந்திருக்கிறார். 

திடீரென்று நிலைதடுமாற, கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். போன் உடைந்துவிட்டது. கீழே விழுந்துவிட்ட தகவலை, யாருக்கும் சொல்ல முடியவில்லை அவரால்.  ’’காப்பாத்துங்க, காப்பாத்துங்க’’ என்று கத்தத் தொடங்கியிருக்கிறார். கேரள கிராமங்களில் வீடுகள், தள்ளி தள்ளி இருக்கும் என்பதால், இவரது அலறல் யாருக்கும் கேட்கவில்லை. 

வியாழக்கிழமையும் அவர் உள்ளே விழுந்து கிடந்தது யாருக்கும் தெரியவில்லை. அவர் நாள் முழுவதும் காப்பாற்றுமாறு கத்திக் கொண்டிருந்தார். யார் காதுக்கும் அது செல்லவில்லை. இரண்டு நாட்கள் சாப்பிடாததால் நேற்று அவருக்குப் பேச்சு வரவில்லை. இருந்தாலும் முடிந்த மட்டும் குரல் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். தற்செயலாக அந்தப் பக்கம் வந்த இளைஞர் ஒருவர், இந்த சத்தத்தைக் கேட்டு கிணற்றை எட்டிப் பார்த்தார். அப்போது பிரதீப் உள்ளே தவித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. 

உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவ ரை பத்திரமாக மீட்டனர். பின்னர் மாவட்ட மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close