[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

ஹிந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

50-crore-allocated-for-appointing-hindi-teachers-in-non-hindi-speaking-states

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய மத்திய பட்ஜெட்டில் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, ஹிந்தியை கட்டாயமாக்கும் முயற்சியில் சமீபத்தில் ஈடுபட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஹிந்தி திணிப்பு கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. இதனால் ஹிந்தியை கட்டாயம் கற்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற நிலை ஏற்பட்டது. விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை தேர்வு செய்யலாம் என வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்தத் திட்டத்தில், 25 சதவீதத்திற்கும் அதிகமான உருதுமொழி பேசும் மக்கள் இருப்பின் அப்பகுதியில் உருது மொழிக்கான ஆசிரியரை நியமனம் செய்ய நிதியுதவி அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்தும் நோக்கில் 488 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை அது முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. அத்துடன், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் அதிகம் சேருவதை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த பட்ஜெட்டில் 256 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அது தற்போதைய பட்ஜெட்டில் 100 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பள்ளிகளில் மதிய உணவு திட்டம், பள்ளிக் கல்விக்கான முதன்மை திட்டம் ஆகியவற்றிக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close