[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் - நிர்மலா சீதாராமன்!

rrb-exam-also-write-in-tamil

இந்தியா முழுவதும் நடைபெறும் ஆர்.ஆர்.பி (RRB) எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசிய போது, ‘இந்தியாவிலுள்ள ரீஜினல் ரூரல் (RRB) வங்கிகளில் ஆபிசர் (Scale I,II & III) மற்றும் அலுவலக உதவியாளர் (Multipurpose) போன்ற பணிகளுக்கான ஐபிபிஎஸ் (IBPS) நடத்தும் பொது தேர்வு இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வர்கள் தேர்வெழுதி வருகின்றனர். இத்தேர்வானது ஆங்கிலம் மற்றும்இந்தியில் மட்டுமே நடப்பதால் பல்வேறு மாநிலங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனை
கருத்தில் கொண்டு அந்தந்த மாநில மொழிகளில் தேர்வெழுதலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார். குறிப்பாக தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் தேர்வெழுதலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வருடம் முதல் தேர்வர்கள் தேர்வு மொழிகளாக ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளுடன் 13 மாநில மொழிகளான அஸ்ஸாமீஸ், வங்காளி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 15 மொழிகளில் இனி வரும் RRB முதன்மைத்தேர்வுகளை எழுதலாம் என்று கூறியுள்ளார். 

குறிப்பு: RRB விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்(04.07.2019)

ஆன்லைனில், https://www.ibps.in/crp-rrb-viii/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.ibps.in/wp-content/uploads/CRP_RRB_VIII_ADVT_15_06_2019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து
கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close